வாய் திறக்காத கூட்டணி கட்சிகள்.. விலை போன ஊடகங்கள் இருக்கு.. சாதனை காணோமேப்பா.. அதிமுக நிர்வாகி செம கலாய்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்றுடன் மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. 

இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் "விமர்சனங்களை பற்றி கவலைப்பட மாட்டேன் . நல்லவைகளை எடுத்துக் கொள்வேன். கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான்." என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் முதன்மை ஆசிரியரும் அதிமுக நிர்வாகியுமான கல்யாணசுந்தரம் தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிக கட்சிகள் வேணுமா? வாயே திறக்காத கூட்டணிகட்சிகள் இருக்கு... ஆதரிக்க மீடியா வேணுமா? விலை போன ஊடகங்கள் நிறைய இருக்கு... ஃபோட்டோ ஷூட் வேணுமா? கேமராவுடன் ஆட்கள் கூடவே இருக்கு... முட்டுகொடுக்க ஆள் வேணுமா? நிறைய நடுநிலை இருக்கு... இத்தனையும் இருந்தும் சாதனை ஒன்னையும் காணோமேப்பா!" என திமுக அரசின் இரண்டு வருட சாதனையை கலாய்த்து உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK executive criticizes DMKs two year rule


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->