வார்த்தை விடாதீங்க.. ஒரே ஓட்டில் "வாஜ்பாயை வீட்டுக்கு அனுப்பினோம்".. எகிறி அடிக்கும் அதிமுக..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியில் முன்னிலையில் இணைந்து வருகின்றனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை "பாஜக நிர்வாகிகளை சேர்த்து தான் திராவிட கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். 

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. ஜெயலலிதா கருணாநிதி போன்று நானும் ஒரு தலைவன். தமிழ்நாட்டிற்கு இட்டிலி சுடவோ தோசை சுடவோ நான் இங்கு வரவில்லை. தமிழக பாஜக தலைவர் எனும் நாற்காலியை தேய்க்கும் மேனேஜராக நான் இங்கு வரவில்லை" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு அதிமுக தலைப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைக்கு ஒரு பங்கம் ஏற்பட்டால் பிரதமரை தொட்டுப் பார்க்கவும் தயங்க மாட்டோம் என அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் பதிலடி தந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அவர் "அதிமுகவுக்கு என்று ஒரு நியூட்டன் வீதி உள்ளது. ஒன்றுக்கு மூன்றாக திருப்பிக் கொடுப்பதுதான் அதிமுகவின் நியூட்டன் விதி.

ஒரே ஓட்டில் வாஜ்பாயை வீட்டிற்கு அனுப்பிய கட்சி அதிமுக என்பதை பாஜகவினர் மறந்துவிடக்கூடாது. அண்ணாமலை வார்த்தைகளை விடக்கூடாது. தமிழகத்தின் உரிமைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் பிரதமரை தொட்டு பார்க்கவும் தயங்காத கட்சி அதிமுக என்பதே கடந்து கால வரலாறு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமையை அறிந்து இளைய சமுதாயத்தினர் அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டி படையெடுத்து வருகிறார்கள். பாஜகவினரை ஏதோ  நாங்கள் விலைபேசி பிடித்து வைத்ததை போல் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என அதிமுக இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக மற்றும் பாஜகவினர்களிடையே வார்த்தை போர் அதிகரித்து காணப்படுவதால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணியில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK executive Paramasivam warns BJP Annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->