அதிமுக பைலா திருத்தம்! டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற எடப்பாடி பழனிசாமி!
AIADMK GC EPS case against EC
அதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்ட சட்டவிதி திருத்தம் மட்டுமே தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று அதிமுகவின் சட்ட விதிகள் அதிமுகவின் பொதுக்குழுவாள் திருத்தப்பட்டு அது தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை தேர்தல் ஆணையத்தால் இந்த சட்ட விதிகள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதற்கான தேர்தல் நடப்பட்டு, எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார்.
இதுகுறித்த அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிமன்ற வழக்குகளால் அதிமுகவின் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், அதிமுக சட்டவிதிகளில் (பைலாவில்) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்துள்ள இந்த வழக்கு, வரும் திங்கட்கிழமை நீதிபதி பிரதீபா எம். சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
AIADMK GC EPS case against EC