சசிகலா ஏதேதோ பேசிகிறார்! தினகரனுக்கு எந்த தொடர்பும் இல்லை - கடம்பூர் ராஜு அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னை : அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு தொடர் முயற்சி எடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு தெரிவித்ததாவது,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மையப்படுத்திதான் என்றுமே தமிழக அரசில் உள்ளது என்பதற்கு அடையாளம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளதற்குச் சான்று.

தமிழக தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்குகளை கூட பாஜகவில் தாண்ட முடியவில்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.

டிடிவி தினகரனுக்கு அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும். தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை என கடம்பூர் ராஜு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK has nothing to do with TTV Dhinakaran by Kadambur Raju


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->