பரபரப்பான அரசியல் சூழலில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்பட தெரிவித்து இருந்தார்.

அதேபோன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததோடு தனது சொந்த தொகுதியான திருவள்ளூர் தொகுதியை அதிமுக ஒதுக்க முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இத்தகைய அரசியல் சூழலில் அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK invite puratchi bhartham for seat share talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->