அதிமுக பிரபலம் அதிரடி கைது! பின்னணியில் "கோபாலபுர கொத்தடிமை சர்ச்சை விவகாரம்"! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக, அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக ஆட்சியின் நிர்வாகியை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தான் இறந்த பிறகு, தனது கல்லறையில் 'இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான்' என்று எழுத வேண்டும் என்று உருக்கமான கோரிக்கையை வைத்தார்.

துரைமுருகனின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதே சமயத்தில் ஒரு சிலரால் விமர்சனம் செய்யப்பட்டது.

அதில், அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு கல்லறை கட்டி தவறாக புகைப்படத்தை சித்தரித்து, அதில் 'கொத்தடிமை' என்ற ஒரு அவதூறான வார்த்தையையும் அதில் எழுதியிருந்தார்.

இது குறித்து வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK IT Wing Arunkumar arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->