வச்சு செஞ்சுட்டாங்க.. இதவிட கேவலப்படுத்த முடியாது.!! திமுகவை வறுத்தெடுத்த ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் "எம்ஜிஆரை கருணாநிதி தான் உருவாக்கினார் என நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "ஒரு விழாவா அது... பல பேரோட சாபம்... என்னாச்சுன்னு தெரியல.. பல நாட்கள் தள்ளி போனது. ஒரு வழியாக கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டதில் வெறும் 899 பேர் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஸ்டாலின் அவருடைய அப்பாவை உலகத்தில் இதை விட வேற எந்த வகையிலும் கேவலப்படுத்த முடியாது. தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் வச்சு செஞ்சுட்டாங்க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து சொல்லிக்கிறேன். முன்னாள் நடிகர்கள் அன்பு சகோதரர் ரஜினி கமல் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு கொடுத்ததை படித்து விட்டு போறாங்க. கருணாநிதி அவர்கள் உயர்ந்தவர் தான் புரட்சித் தலைவர் எனக் கூறியதை தமிழ்நாடு இருக்குமா புரட்சித்தலைவர்களின் ரசிகர்கள் ஏற்பார்களா? எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் முதலமைச்சர் பதவி. மறைவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சராகிய இதை எம்ஜிஆர் தான்.

நாவலர் எழுதிய கடிதத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை புகழ்ந்து எழுதி இருப்பார். கருணாநிதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எம்ஜிஆரால் தான் நான் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று இருக்கும் ஒரு வரலாறை மாற்றி பேசுகிறார்கள். திமுகவில் எம்ஜிஆர் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். 1972ல் கட்சி ஆரம்பித்த பிறகு கருணாநிதியால் முதலமைச்சராக முடிந்ததா? 11 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த ஒரே தலைவர் கருணாநிதி. 

இந்த வரலாறு எல்லாம் மறைத்துவிட்டு நடிகர்கள் ரஜினியும்  கமலும் பேசினால் எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை தெரிந்துதான் முன்னணி நடிகர்கள் விஜய் அஜித் இருவரும் விழாவை புறக்கணித்தார்கள்" என கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk jayakumar criticized dmk karunanithi mkstalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->