"ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி".. பி.டி.ஆர் ஆடியோவுக்கு சிபிஐ விசாரணை உறுதி.. அதிமுக ஜெயக்குமார் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "திமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி மட்டும் தான். அவ்வாறு ஊழலை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி இன்று ஊழலில் திளைத்து எங்கும் ஊழல் என்ற நிலையில் கீழ் நிலையில் இருந்து மேல்நிலை வரை ஊழல் இன்று அரங்கேற்றி கோடிக்கணக்கான ரூபாய் சேர்த்துக் கொண்டிருக்கின்ற நிலைமை நிலவுகிறது.

மு க ஸ்டாலின் குடும்பத்தினர் 30,000 கோடி ரூபாய் ரூபாய் சேர்த்ததாக தமிழ்நாடு நிதி அமைச்சரை கூறியுள்ளார் என்ற ஆடியோ வெளியாகி உள்ளது. அது தனது குரல் இல்லை என அவர் மறுக்கலாம். ஆனால் பொதுமக்கள் அது அவருடைய குரல் தான் என கூறுகிறார்கள். ஆனால் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. 

அந்த ஆடியோவில் குறிப்பிட்டது போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகிய மூன்று பேரையும் விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவாதம் கொடுத்துள்ளார். 

அதேபோன்று தமிழக அமைச்சர்கள் 10 பேர் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான சொத்துகளை குவித்து உள்ளனர். இவர்கள் குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் என பெயர் குறிப்பிட்டு உள்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அவற்றை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் முள்ளாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar said on CBI investigation on PTR audio


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->