அண்ணாமலை கொளுத்தி போட்ட குண்டு.."பாஜக நிலைப்பாடு என்ன..?" - கே.பி முனுசாமி கேள்வி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பி முனுசாமியிடம் செய்தியாளர் ஒருவர் அண்ணாமலை தமிழகத்தை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு அறிவித்திருப்பது அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை முறித்துக் கொள்ள விரும்புகிறாரா..?  என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கே.பி முனுசாமி "அண்ணாமலை ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். எங்களைப் பொருத்தவரை பாஜகவின் தலைவராக இருந்து ஊழல் பட்டியலை வெளியிட்டாரா..? அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை என்கிற தனி நபர் வெளியிட்டார்..? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

அப்படி பாஜகவின் சார்பாக அவர் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இது போன்ற அந்த மாநிலத்தினுடைய தலைவர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட இருக்கிறார்களா..? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். 

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் அதிமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு எங்களுடைய பதில் இருக்கும். பாஜக சார்பில் வெளியிட்டிருந்தால் அதற்கு தகுந்த மாதிரி எங்களுடைய பதில் இருக்கும்" என பதிலடி தந்துள்ளார்.

மேலும் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் ரசீது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த கே.பி முனுசாமி "இதெல்லாம் ஒரு பெரிய செய்தி இல்லை. இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நாம் நேரத்தை கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாட்ச் கட்டுவது எல்லாம் விமர்சனம் செய்வது அரசியலுக்கு அழகாக தெரியவில்லை. நான் வாட்ச் கட்டுவதே இல்லை. அதற்காக நான் வாட்ச் கட்டுவதில்லை என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியுமா..? மக்களுக்கு தேவையான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் இது போன்ற சாதாரண நிகழ்வுகளால் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் மீதான அழுத்தம் குறைந்து விடுகிறது" என பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலை மேற்கொள்ள உள்ள நடை பயணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் "ஏதோ இவர் மட்டும்தான் இந்த நாட்டிற்காக பிறந்தவர் போல பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் ரீதிகளாகவும் இருக்கிறார்கள்,  சமூக ரீதியிலாமல் இருக்கிறார்கள். தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான மக்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கின்ற சூழலில் அவர் ஏதோ சொல்கிறார் அது அவருடைய கருத்து. அவருடைய கருத்தில் நாம் பதில் சொல்ல முடியாது" என பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலை அதிமுகவினாருடைய ஊழல் பட்டியலும் வெளியிடுவேன் என கூறியிருப்பது அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. அதிமுக துணை பொதுச்செயலாளராக இருக்கும் கே.பி முனுசாமி யின் கேள்விக்கு பாஜக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வரை அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக தேசிய தலைவர்கள் சொல்லிவரும் நிலையில் தமிழக பாஜக தலைவரின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK kp munusamy questions BJP on Annamalai speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->