20 லட்சம் பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்தாச்சு.. கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் பதில்...!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். குறிப்பாக "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று..??" என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என் நேரு பதிலளிக்காமல் "2016ல் பெண்களுக்கு இலவச செல்போன் தருகிறேன் என்று சொன்னீர்களே இதுவரை கொடுத்தீர்களா..??" என எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து கே.பி முனுசாமி "அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என கருணாநிதி சொன்னாரு செய்தாரா..??" என கேள்வி எழுப்ப, அதற்கு சபாநாயகர் அப்பாவு கருணாநிதி சொன்னபடி தமிழகத்தில் 20 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது" என பதில் அளித்தார். அதன் பிறகு அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி கேள்வி எழுப்ப சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA KP Munusamy question about DMK election manifesto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->