வெற்றிக்கொடி நாட்டப்போகும் எடப்பாடி பழனிசாமி - வெளியான தகவலை உறுதிசெய்த முக்கிய புள்ளி!
AIADMK One head Election soon
முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள், சுமார் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்படுவார் என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அடுத்த நான்கு மாதங்களுக்குள், பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட காலத்துக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் பொது செயலாளருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வருகின்ற அக்டோபர் முதல் வாரத்திலேயே இந்த தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விரைவில் பொதுக்குழு நடைபெறும் என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் பேட்டியில், "பொதுக்குழு நடத்தி பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த விதமான தடையும் கிடையாது.
அதிமுகவின் ஒரே நம்பிக்கை, உலகத் தமிழர்களின் பாதுகாவலர் எடப்பாடியார் தான். கடைக்கோடியில் கொடி ஏற்றிய அதிமுக தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளது. அதில் நானும் ஒருவன்" என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK One head Election soon