தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக! வைரலாகும் பழைய நாளிதழ் செய்தி!
AIADMK party formed by volunteers Old newspaper news goes viral
திமுக கிளை பெயர்கள் அதிமுக கிளை என பெயர் மாற்றம் பெற்ற சுவாரஸ்யம்!
தற்பொழுது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் நிர்வாகிகளின் நீக்கம் பற்றி நாம் அறிவோம். ஒற்றைத் தலைமை கோரிக்கை முதல் உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவை வரை அனைத்தையும் பார்த்திருப்போம். ஜெயலலிதா இறந்தது முதல் அதிமுகவில் பல்வேறு உட்கட்சி குழப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை அதிமுக கண்டு வருகிறது.
ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக திமுகவில் ஒரு உட்கட்சி பூசல் உருவானது. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒற்றை நபரால் அடிப்படை உறுப்பினர்கள் முதல் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் வரை அந்த நபர் பின்னால் நின்றார்கள். இதனால் திராவிட முன்னேற்றக் கழகம் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறாக அதை இன்றளவும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்தான் அதிமுக தொண்டர்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்படும் எம்.ஜி ராமச்சந்திரன்.
எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகளின் பெயர்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றினர். திமுகவின் கொடியில் உள்ள கருப்பு சிகப்பு வர்ணத்தை நிற்க வைத்தது போல் கொடியை உருவாக்கி அதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியாக அறிவித்து கையில் ஏந்த தொடங்கினர்.
எம்ஜிஆர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத புதிய இயக்கத்தையும் கட்சியையும் அவரது ஆதரவாளர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டி ஒன்றிணைந்து எம்ஜிஆர் பக்கம் நின்றனர். இந்த தகவல் அன்றைய காலகட்டத்தில் வெளியான பல பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இன்று அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி தொடர்பான புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பல அதிமுக தொண்டர்கள் "அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி " என தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
AIADMK party formed by volunteers Old newspaper news goes viral