அதிரடி ஆரம்பம்.. புதிய தமிழகத்திற்கு எந்த தொகுதி.!! டாக்டர் உடன் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம்‌ கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உடன் அதிமுக தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதிமுக தேர்தல் தொகுதி பங்கேற்று குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி தங்கமணி ஜெயக்குமார் பெஞ்சமின் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக தேர்தல் தொகுதி பங்கேற்ற குழு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். 

இரு தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திய நிலையில் இரண்டாவது முறையாக அதிமுக தொகுதி பங்கிட்டு கிருஷ்ணசாமியை சந்தித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்குவது என அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாகவும், ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுக தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இது குறித்து இன்று நடைபெறும் ஆலோசனையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk seats sharing committee met DrKrishnasamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->