ஐ.பி.எல் தொடர் - சென்னையில் சிறப்பு ரெயில்கள் இயக்கம்.!
special train run in chennai cheppakkam for ipl 2025
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று, 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் மூன்று சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
* வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.
* சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special train run in chennai cheppakkam for ipl 2025