தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுவன்; 02-ஆயிரம் கி,மீ தூரத்தில் குடிசையில் தங்கி கூலி வேலை..!
A boy ran away from home due to fear of exams
டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். திடீரென கடந்த மாதம் 21-ம் தேதி அச்சிறுவன் காணாமல் போயுள்ளான். இதனால் பதற்றமடைந்த அவனது பெற்றோர் அவனை தேடத் தொடங்கியுள்ளனர்.
அந்நிலையில், அந்த சிறுவன் இதுபற்றி தனது தந்தைக்கு தகவல் அனுப்பியிருக்கிறான். அதில் அவன், 11-ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டு செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறான். பதறிப்போன அவனது தந்தை காவல் நிலையத்தில் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி, சுமார் 2,000 கி.மீ. தூரம் பயணம் செய்து தமிழகம்-கர்நாடக எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி பகுதியில் இருந்தமை தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டுள்ளனர்.

சிறுவன் மீட்கப்பட்டமை தொடர்பில், காவல்துறை துணை கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது:-
''11-ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுத விரும்பாத மாணவன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறான். அவனை தேடுவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவன் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்றது தெரியவந்தது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''பெங்களூருவில் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு ரெயில் மூலம் அங்கு சென்றடைந்த சிறுவன், தமிழ்நாடு- கர்நாடக எல்லை அருகே உள்ள கட்டுமான பகுதியில் கூலி வேலை செய்யத் தொடங்கி உள்ளான். போலீஸ் தனிப்படை அங்கு சென்ற போது அங்குள்ள குடிசையில் இருந்துள்ளான். சிறுவன் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டான்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
A boy ran away from home due to fear of exams