அண்ணாமலையை மெஸ்ஸியுடன் ஒப்பிட்ட அமர் பிரசாத் ரெட்டி.. பாஜகவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18ம்) இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதையடுத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்களை, ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிலையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர் பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில் அண்ணாமலையும், மெஸ்ஸியும் எல்லா நேரங்களிலும் சிறந்தவர்கள் என்று இருவரும் கையில் ஆட்டுக்குட்டி (GOAT - Greatest Of All Times) வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் இதனை கலாய்த்து வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amar Prasad Reddy compare to messi and Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->