உக்ரைன்-ரஷ்ய போரை நிறுத்த பிரதமர் மோடியால் தான் முடியும் - உக்ரைன் நாட்டு தூதர் கோரிக்கை.!
Ambassador of Ukraine to India Igor Polikha
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சற்றுமுன் இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பொலிகா ANI செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், "இந்த விவகாரத்தில், இந்திய பிரதமர் மோடி அவர்கள், புடின் உடன் உரையாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் நமது ஜனாதிபதியை உரையாற்ற முடியும்.
போர் வரலாற்றில் இந்தியா பலமுறை அமைதி காக்கும். ஆனால், இந்த போரை நிறுத்த உங்கள் வலுவான குரலை நாங்கள் வலியுறுத்திக்கிறோம்" என்று இந்தியாவுக்கான உக்ரைன் நாட்டின் தூதர் இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்.
(ANI செய்தியில் : Delhi: Dr Igor Polikha, Ambassador of Ukraine to India seeks Government of India's intervention amid #RussiaUkraineConflict; urges PM Narendra Modi to speak with Russian President Vladimir Putin. I think that in this case, your Prime Minister can address Mr Putin. He can address our President. Many times in history, India played a peacekeeping role. We're asking for your strong voice to stop this war: Dr Igor Polikha, Ambassador of Ukraine to India )
ANI செய்தி காணொளி :
English Summary
Ambassador of Ukraine to India Igor Polikha