சனாதன தர்மம் மீது வெறுப்பு! உதயநிதியுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா? கண் சிவந்த அமித்ஷா!
AmitShah asks congress agrees with Udayanidhi view on SanatanaDharma
சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியிருந்தார். குறிப்பாக இந்த மாநாட்டிற்கு சனாதான எதிர்ப்பு மாநாடு என்று பெயரிடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என பெயர் வைத்ததற்கு அதன் உரிமைகளை பாராட்டுகிறேன்.
சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்கத்தாக வேண்டும். டெங்கு, மலேரியா, கொரோனா, கொசு போன்றவற்றை ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. அது போல சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அமைச்சர் உதயநிதியின் இத்தகைய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்திற்கு மத்திய பாஜக அமைச்சர் அமித்ஷா ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர் "காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில் தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
இண்டியா கூட்டணியை சேர்ந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு வங்கிக்காக சனாதன தர்மத்தை அவமதித்து வருகின்றனர். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா? என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். இந்து மதத்தை விமர்சனம் செய்ததற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார்.
English Summary
AmitShah asks congress agrees with Udayanidhi view on SanatanaDharma