டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி - தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி!
AMMK Member joint ADMK EPS side
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அய்யாதுரை பாண்டியன், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு, தனது ஆதரவாளர்கள் சுமார் 100 பேருடன் வந்த அமமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமு.கவில் இணைந்தார்.
மாற்று கட்சியில் வந்தவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, "திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் மக்களை, 53 சதவீதம் மின் கட்டணம், 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தி நிம்மதி இல்லாமல் செய்துள்ளது இந்த திமுக அரசு.
ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சொன்னார்கள். நீட் தேர்வு ரத்து செய்தார்களா? இதற்க்கு பாராளுமன்றத்தில் ஏதாவது குரல் கொடுத்தார்களா? எதுவும் செய்யவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
AMMK Member joint ADMK EPS side