"சாதிவெறியருக்கு" தமிழக அரசின் "அம்பேத்கர்" விருது! வெட்கக் கேடு! வைரலாகும் போஸ்ட்! - Seithipunal
Seithipunal


"சாதிவெறியருக்கு" தமிழக அரசின் "அம்பேத்கர்" விருது! வெட்கக் கேடு! என்ற தலைப்பில் ஒரு போஸ்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

"2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் அணிவித்து அவர் சிறப்பிக்கப் படுவார்" என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது!

வன்னியர்களுக்கு எதிரான அப்பட்டமான சாதிவெறி கட்டுக்கதைகளை உருவாக்கி, அதனை பொதுச்சமூகம் உண்மை என்று நம்பும் அளவுக்கு பரப்புரைகளை நிகழ்த்துபவர் தான் இந்த #வன்னியபோபியா மனநோயாளி ரவிக்குமார் ஆகும்.

ஒரு சாதிவெறியருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அளிப்பதன் மூலம், வன்னியர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது மு.க. ஸ்டாலின் அரசு.

எடுத்துக்காட்டு 1: "விழுப்புரம் நவீனா"

விழுப்புரத்தில் பள்ளி செல்லும் மாணவி நவீனா ஒரு நாடகக் காதல் கயவனால் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டார். அந்த அயோக்கியனுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியவர் தான், விழுப்புரம் திமுக MP ரவிக்குமார் ஆகும்!

விழுப்புரம் நகரில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2012 ஆம் ஆண்டில் இரண்டாண்டு சிறைத்தண்டனை அடைந்தவன் 'நாடகக் காதல் போராளி' செந்தில். இந்த சமூக விரோதி, 2015 ஆம் ஆண்டில், குடிபோதையில் இரயிலில் விழுந்து, கை, கால் துண்டிக்கப்பட்டான்.

ரவிக்குமார் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவனை போராளியாக ஆக்கி - வன்கொடுமை சட்டத்தின் கீழ் பணம் பறிக்க திட்டமிட்டனர். "பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது வன்னியர் பெண்ணை 30 வயது தலித் செந்தில் காதலித்ததால் அவரின் வலது கை, கால் தூண்டிக்கப்பட்டதாக" அப்பாவி நவீனா குடும்பத்தினர் மீது, 3.7.2015 ஆம் நாளன்று பொய்யாக புகார் செய்ய வைத்தனர். 

மறுநாளே, புதிய தலைமுறை தொலைக்காட்சி இதை வைத்து ஒரு விவாதம் நடத்தியது. இதில் கொலையாளி செந்தில் நேரடியாக பங்கேற்றான். திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் காமக்கொடூரன் செந்திலுக்கு வக்காலத்து வாங்கினார்.

செந்தில் ஒரு சாதி ஒழிப்பு காதல் போராளி எனக் குறிப்பிட்டு, 10.7.2015 ஆம் நாளன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கண்டன உரையாற்றியவர்தான் இந்த ரவிக்குமார். 

அந்த போராட்டம் நடந்த ஓராண்டில் 29.7.2016 ஆம் நாளன்று வீட்டில் தனது தம்பியுடன் நவீனா இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த செந்தில், குழந்தை நவீனாவை ஒரேயடியாக தீவைத்து கொளுத்தி படுகொலை செய்தான்.

எடுத்துக்காட்டு 1: "சிறுமதுரை சிறுமி"

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் எரித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமி, கொலை செய்த குற்றவாளிகள் ஆகிய இரு தரப்புமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதில் சாதி ரீதியிலான மோதலுக்கு இடமே இல்லை.

ஆனால், உண்மையை விசாரிக்கும் முன்பாகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த, விழுப்புரம் தொகுதி திமுக MP ரவிக்குமார் "ஆதிதிராவிட மக்கள் மீது அதிகரித்துவரும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி, சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று சமூக ஊடகத்தில் பிரச்சாரம் செய்தார். இதனை பார்த்து பலரும் - "விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தலித் கொலை செய்யப்பட்டால் அதற்கு வன்னியர்கள் தான் காரணமாக இருப்பார்கள்" - என்கிற முன்முடிவுடன் சமூக ஊடகங்களில் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை உமிழ்ந்தனர்!

எங்காவது ஒரு தலித் கொலை செய்யப்பட்டால் - அதற்கான காரணத்தை கண்டறியும் முன்பாகவே வன்னியர்கள் மீது பழிபோட்டு, அவர்களை குற்றவாளி சமூகமாக காட்டவேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் வன்னியர்களை இனப்படுகொலை செய்வதற்கான நியாயத்தை உருவாக்க வேண்டும் எனும் நீண்டகால திட்டத்துடன் செயல்படுபவர் ரவிக்குமார் ஆகும். ஜெர்மனியில் இனப்படுகொலை வெறியன் ஹிடலர் உருவாக்கிய பொய்பிரச்சர உத்தி இதுவாகும்.

இவ்வாறான இனவெறுப்பு பொய்ப் பிரச்சாரகர் ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது அளிப்பது, திமுக கும்பலின் வன்னியர் விரோத மன அழுக்கையே காட்டுகிறது! வெட்கக் கேடு!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK DMK Govt Some viral post


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->