ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை!...சென்னையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவ வழக்கில் முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சீசிங் ராஜஸவை போலீசார் ஆந்திராவில் வைத்து நேற்று ,முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நீலாங்கரையை அடுத்த அக்கறை பகுதியில்  சீசிங் ராஜ் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் அந்த ஆயத்தங்களால் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரவுடி சீசிங் ராஜாவை போலீசார்  என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இவருடன் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amstrong murder famous sh rowdy Sising Rajaot dead in an encounter Sensation in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->