தினம் ஒரு மோசடி! மின் கட்டண உயர்வு ஒரே காரணம் கமிஷன்! திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் அன்புமணி! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்குப் பிறகு மின் கட்டண உயர்வை அறிவித்தது. தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் எழுப்பினர். அதில் பாமக நிறுவன டாக்டர் மருத்துவர் ராமதாஸ் மின் கட்டண உயர்வை தமிழக அரசு  திரும்ப பெற கோரி வலியுறுத்தி இருந்தார்.

மின் கட்டண உயர்வை திரும்பபெறவில்லை என்றால் பாமக சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  ஜூலை 19ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகே மின்கட்டண உயர்வை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் லட்சக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது, தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை தமிழக அரசு கட்டமைத்து விட்டுள்ளது.

மின்சாரம் மூலம்  தமிழக அரசுக்கு இரண்டு மாதங்களில் 40 ஆயிரம் கோடி வருமானம். மக்களிடையே மின்சார வாரியம் நஷ்டத்தில் இறங்குவதாக கூறி பெரும் மோசடி செய்கின்றனர்.

ஆளும் திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பது துளியும் கிடையாது. பணத்திற்காகவும் கமிஷனிற்காகவும் தனியாரிடம் மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுத்துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss led a demonstration protesting against the increase in electricity tariffs


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->