உத்தரவை நிறைவேற்றாத 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலா இரண்டு வாரங்கள் சிறை., அதிரடி தீர்ப்பு.!
ANDHRA HC JUDGEMENT IN IAS Officer case
ஆந்திர மாநிலம் : அரசு பள்ளிகளில் உள்ள கிராம மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற வேண்டும் என்று, அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்ற தவறியதால் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலா இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வாசஹங்கி உத்தரவிட்டது.
அப்போது, அந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களுக்கான சிறைத்தண்டனையை திரும்ப பெற்ற நீதிமன்றம், அவர்கள் 8 பேரும் ஓராண்டுக்கு, மாதத்தில் ஒரு நாள் சமூக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி உத்தரவிட்டது.
மேலும், பள்ளி மாணவர்களின் மதிய உணவு, இரவு உணவு, நீதிமன்றத்தின் ஒரு நாள் செலவினங்களுக்கான செலவுகளை ஏற்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
English Summary
ANDHRA HC JUDGEMENT IN IAS Officer case