கணவனின் நினைவாக மனைவியின் காதல் சின்னம்; பூமிக்கு கீழ் தலைகீழாக கட்டப்பட்ட கோவில்! தாஜ்மகாலை மிஞ்சிய கட்டிடக்கலை..!
Rani Ki Vav stepwell built upside down underground
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்ட மிக முக்கியமான இடங்களில் குஜராத்தில் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடம் ராணி கி வாவ். ராணி கி வாவ் ( Rani ki vav), குயின்ஸ் ஸ்டெப் வெல் ( 'The Queen's Stepwell') வெல் என்றும் குறிப்பிடப்படுகிறது. ராணி-கி-வாவின் வடிவம் தலைகீழான கோவிலின் அமைப்பை கொண்டுள்ளது. இது தண்ணீரின் புனிதத்தன்மையைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
குஜராத் மாநிலம் பதான் நகரத்தில் அமைந்துள்ளது, ‘ராணி கி வாவ்’ என்ற படிக்கிணறு. இதனை தமிழில் ‘ராணியின் கிணறு’ என்பார்கள். 1050-ஆம் ஆண்டு சோலங்கி குல அரசை நிறுவியவர் முதலாம் பீமதேவன். இவரது நினைவாக, அவரது மனைவி உதயமதியால் 1063-ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் இந்த படிக்கிணறு.
-x2rn4.jpg)
இதனை ஒரு பெண் நிறுவிய ‘காதல் சின்னம்’ என்றும் சொல்லலாம். 64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 27 மீட்டர் ஆழம் கொண்டது இது. தரையின் கீழே 07 அடுக்குகளைக் கொண்டதாக இந்த கட்டமைப்பு இருக்கிறது. பிற்காலத்தில் மண் மூடிப்போயிருந்த இந்த கட்டிடத்தை, தொல்லியல் துறையினர் 1960-ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
அதாவது, படிகிணறு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், தலைகீழான கோவிலின் வடிவமைப்பை கொண்டுள்ளது என்பது பலரும் அறியாத ரகசியம். சரஸ்வதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு, 1980 களில்தான் இந்திய தொல்லியல் துறையால் படிக்கட்டுக் கிணறு தோண்டப்பட்டது.
-zh48v.jpg)
இந்த படிக்கட்டு கிணறு, அந்த காலத்தில் நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு வரலாற்று சான்றாக இன்னும் விளங்குகிறது.
இந்த கோவிலில் உள்ள தூண்கள் மற்றும் உள்ளார்ந்த சிற்பங்கள் பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்துடன், பழங்கால கட்டிடக்கலைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெயர் தெரியாத கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட நுண்ணிய விவரங்கள் கொண்ட உருவங்களைக் கொண்ட சிற்பங்களைக் பார்ப்பவர்கள் மே சிலிர்த்து போகும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் 500 க்கும் மேற்பட்ட கடவுள்கள், பெரிய சிற்பங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய சிற்பங்களும் காணப்படுகின்றமை சிறப்பம்சம். இந்த படிக்கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிற்பங்கள், காளி, மகிஷாசூரன், நாக கன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன கூடிய தேவலோக கன்னிகள், புத்தர், சாதுக்கள், திருப்பாற்கடலில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் வராஹா, ராமர், வாமனன், பலராமர், பரசுராமர், காலபைரவர், மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் சிற்பங்கள் மிக முக்கியமானவை.
பொதுவாக வராக மூர்த்தி பூமியை மீட்டு வந்த சிற்பத்தை வடிக்கும்போது, அவரது இரண்டு கொம்புகளுக்கு மேல் பூமி இருப்பது போல்தான் வடிப்பார்கள். ஆனால், இந்த சிற்பம் பூமியை பெண்ணாக உருவகித்து புராணங்கள் சொல்வதைப் போல, சிற்பத்திலும் பூமாதேவியை பெண்வடிவில் செதுக்கியிருப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.

ராணி கி வாவ் 2014-இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அத்துடன், ராணி கி வாவ், 11-ஆம் நூற்றாண்டில் நிலத்தடி நீர் மேலாண்மையில் ஒரு தொழில்நுட்ப அற்புதமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.
30 கிலோமீட்டர் சுரங்கப்பாதைக்கு செல்லும் ஒரு சிறிய வாயிலில் கீழ் படி முடிவடைகிறது. அகமதாபாத்தில் இருந்து 125 கிமீ தூரத்திலும் காந்தி நகரில் இருந்து 118 கிமீ தூரத்திலும் உள்ளது.
English Summary
Rani Ki Vav stepwell built upside down underground