100 நாட்களில்; 100 வது நாளில்.!! திமுகவுக்கு எதிராக புயலை கிளப்பிய அண்ணாமலை!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் வீடு அமைந்துள்ள பகுதியில் பாஜகவினர் கொடி கம்பம் அமைக்க திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளை முடித்திருந்தனர். இந்நிலையில் பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் இஸ்லாமிய அமைப்புகளும் பொதுமக்களும் திடீரென எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜகவினரின் கொடிக்கம்பம் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை இடம் அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்ததால் பாஜக கொடி கம்பத்தை அகற்ற போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டுவந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி இயந்திரத்தில் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இதனால் பாஜகவில் இருக்கும் போலீசார்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பாஜகவினர் அனைவரையும் போலீசாரால் கைது செய்த பிறகு பாஜக கொடிக்கம்பம் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் "குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். 

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். 

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai announced 10000 BJP flags placed across Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->