ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசு! குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவா? அண்ணாமலை கண்டனம்! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில், "நீங்கள் ஓசியில்  தானே பயணம் செய்கிறீர்கள்" என்று பேசியது பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கோவை அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த மூதாட்டி துளசியம்மாள் என்பவர் "நான் ஓசியில் பயணம் செய்வதாக என்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள். நான் ஓசியில் இனி பயணம் செய்ய மாட்டேன். காச புடி, டிக்கெட் கொடு" என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, தமிழகத்தில் முதல் ஆளாக தன் தன்மானத்தை மீட்டெடுத்த  காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதற்கிடையே, கோவை அரசு பேருந்தில் இலவச டிக்கெட் வேண்டாம் என்று வாதம் செய்த துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்று திமுகவினர் குற்றச்சாட்டினர். 

இந்த நிலையில், துளசியம்மாள் திட்டமிட்டு அதிமுகவினருடன் இணைந்து வீடியோ எடுத்ததாகவும், அரசின் திட்டத்திற்கு எதிராக சதித்திட்டம் திட்டியதாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 3 அதிமுகவினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஓசி டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்த திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Condemn fot kovai thulasiyammal issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->