அண்ணாமலை பாத யாத்திரை திடீர் நிறுத்தம்.? காரணம் என்ன.?
Annamalai En Man En Makkal yathra suddenly stopped
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதையாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கினார். இந்த பாதயாத்திரியை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த பாதயாத்திரையில் விடியல.. முடியல என்ற வாசகத்துடன் கூடிய மக்கள் புகார்பெட்டி இடம் பெற்றுள்ளது. ஊழல், சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் புகார் பெட்டியின் மூலம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பாஜக தலைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கிய பாத யாத்திரை பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்தூர், மேலூர், மதுரை ஆகிய நகரங்களில் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் பாதையாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
English Summary
Annamalai En Man En Makkal yathra suddenly stopped