எடப்பாடி பழனிசாமி பற்றி விமர்சிக்க அண்ணாமலைக்கு உரிமையில்லை! - கே.பி.முனுசாமி கண்டனம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் ஏற்கனவே வெற்றிபெற்ற நிலையில் பா.ஜ.க அண்ணாமலை மாநில தலைவரான பிறகு அங்கும் தோல்வியடைந்தது. அண்ணாமலை விரைவில் நீக்கப்படுவார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து  அவர் பேசியதாவது:-

அண்ணாமலை தான்தோன்றிதனமாக பேசி வருகிறார். அவரை போன்று பரிந்துரையால் கட்சிக்கு வரவில்லை.  எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையைப்போல யாருடைய சிபாரிசின் பேரில் பதவிக்கு வரவில்லை. அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பற்றி விமர்சிக்க தார்மீக உரிமையில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து 2026 தேர்தலில் 4-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும் என்ற அண்ணாமலை பேச்சுக்கு பதிலளித்து அவர் கூறியது, 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. மக்களவை தேர்தலில் ஒரு இடத்திலாவது தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றதா? 

அண்ணாமலை மாநில தலைவரான பிறகு பா.ஜ.க. ஏற்கனவே வெற்றிபெற்ற கன்னியாகுமரியிலும் தோல்வியடைந்து. மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்பதால் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அண்ணாமலை பேசுகிறார்.

அண்ணாமலைக்கு தலைமை பொறுப்பு தொடர்ந்து இருக்காது என்ற பயம் வந்துவிட்டது. பா.ஜ.க. மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை விரைவில் அக்கட்சியின் தலைமையே அகற்றும் என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai has no right to criticize Edappadi Palaniswami KP Munusamy condemned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->