மது ஆலை நடத்துபவர் மகனுக்கு அமைச்சர் பதவி.. வெட்கப்பட வேண்டும்.. போட்டுத் தாக்கிய அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர் சில அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொழுது திராவிட கட்சிகள் டாஸ்மாக்கை நம்பி தான் அரசாங்கம் இயங்குகிறது என்பது போல பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "டாஸ்மாக்கை நம்பி தான் தமிழக அரசு இயங்குகிறது என்று சொல்பவர்கள் வெட்கப்பட்டு தலை குனிந்து தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

உங்கள் குடும்பம் வாழ்வதற்காக தமிழக மக்கள் மீது பழி போட வேண்டாம். டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பரவி விடும் என சொல்கிறார்கள். கள்ளச்சாராயம் என்பது முழுமையாக வேறு. அதற்கென தனி இலாகா இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் தமிழக மக்களை குடிகார மாநிலமாக மாற்றி பெண்களின் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பயன் அடைபவர்கள் யார் என்று பாருங்கள். திமுகவில் இருக்கும் சில அமைச்சர்கள், சில எம்பிக்கள் தான். அவர்களுக்கு தான் டாஸ்மாக் மூலமாக லாபம். தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய மது ஆலையை நடத்திக் கொண்டிருக்கும் திமுக எம்.பியின் மகனுக்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் எங்கிருந்து விளங்கும். இதெல்லாம் பண்ணிட்டு டாஸ்மாக் மூடிவிட்டால் கள்ளச்சாராயம் அதிகரித்து விடும் என கூறனால் இதை நம்ப மக்கள் என முட்டாள்களா..?

இன்னும் இவர்கள் நம்மளை 1970 போன்று முட்டாள் மக்கள் என நம்புகிறார்கள். இவர்கள் சொல்லுவதை முரசொலியில் எழுதினால் நாங்கள் நம்ப வேண்டுமா..? ஒவ்வொருவருக்கும் அறிவு இருக்கிறது, எல்லாரும் படிக்கிறார்கள். தமிழனுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. இவர்கள் தமிழனை முட்டாள் என நினைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கான பதிலடி 2024ல் தமிழ் மக்கள் தருவார்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கடமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai has severely criticized DMK and tn cabinet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->