அண்ணாமலையின் திடீர் அழைப்பு.! ஈபிஎஸ் நிலைப்பாடு என்ன.? உற்றுநோக்கம் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் தழுவிய பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

முதல் நாள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ள இந்த யாத்திரையானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதற்காக முதல் நாள் பொதுக்கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி கட்சி தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக தரப்பினருக்கும் தமிழக பாஜக திரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்து அதிமுகவினரை கொந்தளிக்க செய்தது. இதன் காரணமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்ணாமலை அடைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பாரா? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதால் அவருடைய முடிவை அதிமுகவினர் உற்றுநோக்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai invited EPS for En Man En Mekkal Pathayatra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->