#DMKfiles part-2 || திமுக அமைச்சர்களுக்கு அடுத்த ஆப்பு.! பட்டியலோடு ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை.!
Annamalai meet Governor with DMK ministers properties list
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை DMK files என்ற பெயரில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுகவினரின் இரண்டாவது சொத்து பட்டியல் இன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், திமுக எம்பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதால் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது பட்டியல் வெளியாக உள்ளது.
குறிப்பாக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்று தற்பொழுது அமைச்சர்களாக இருக்கும் பெரும்பாலான அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பரபரப்பான இந்த அரசியல் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை 3 மணி அளவில் தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை தமிழக ஆளுநர் ரவியிடம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் தமிழக முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிட்டு அதனை ஆளுநரிடம் வழங்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Annamalai meet Governor with DMK ministers properties list