கட்சியில் பல பிரச்சனைகள் இருக்கு... யாருக்கு என்ன தொடர்புனு தெரியும்... மௌனம் கலைத்தார் அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் "திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள், ஆனால் தமிழக பாஜகவில் உங்களால் பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது" என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "என் மீது குற்றச்சாட்டு வைக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி நான் தான். தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் என் மீது குற்றம் சாட்டுவது போல இவர்களும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதுவும் நல்லது தான் பேசும் பொருளாக இருக்கும் பொழுது தான் மக்களுக்கு உண்மை தெரிய வரும். பாஜகவில் இருந்து வெவ்வேறு காரணத்திற்காக செல்கின்றனர். பொதுவாக நான் திமுகவை எதிர்க்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். 

அதையும் தாண்டி தற்பொழுது மிக ஆக்ரோஷமாக எதிர்க்கிறோம். சில பல பிரச்சனைகள் உள்ளே எல்லாம் நிறைய இருக்கிறது. யாருக்கு என்ன தொடர்பு.. எங்கே இருக்கிறார்கள்.. என்பது குறித்து விரிவாக இங்கே பேச விரும்பவில்லை. ஒரு பத்திரிகை என்னைப் பற்றி கருத்துக்களை தெரிவிக்கிறது என்றால் அவர்களுக்கும் என்ன தொடர்பு என எனக்கு தெரியும். யார் என் மீது குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு என்பதில் மௌனம் தான். மக்கள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  மக்கள் முடிவு செய்வார்கள். அதே போன்று தான் கட்சியில் இருந்து விலகி இருப்பவர்கள் கூட, அவர்கள் எங்கே சென்றாலும் நன்றாக இருக்கட்டும் ஆண்டவன் அவர்களுக்கு துணையாக இருப்பார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai met the media about TNBJP issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->