பி. எம் கிஸான் திட்டம் : விவசாயிகள் நீக்கப்பட்டது குறித்து அண்ணாமலை கேள்வி..!! - Seithipunal
Seithipunal



பி எம் கிசான் திட்டத்தில் இருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று (ஜூலை 15) பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "மத்திய அரசு 2020ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்தது. 

அதில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு நிதி அளிக்கும் என்றும் அறிவித்தது. அத்தகைய மிகச் சிறப்பான திட்டங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல் தமிழக அரசு விதண்டாவாதம் செய்து வருகிறது. 

தமிழகத்தில் பி. எம் கிசான் திட்டத்தில் சுமார் 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ. 6000 நிதியுதவி பெற்று வந்தனர். குறு விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது 

ஆனால், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது வெறும் 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே பி. எம். கிசான் திட்டத்தின் மூலம் பலனடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசின் மீது அதிருப்தி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் ஆளும் திமுக அரசு இத்திட்டத்தில் இருந்து விவசாயிகளை நீக்கியுள்ளது. 

தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து திருச்சியில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Questioed About Farmes Removed From PM Kisan Scheme


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->