ஓரே முகவரி.. ரூ.1,000 கோடி முதலீடு.. பாயிண்ட் பிடித்த அண்ணாமலை.. திமுகவிடம் இருந்து பதில் வருமா..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் செயல்பட்டு வந்த உதயநிதி அறக்கட்டளையின் 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயை அமலாக்க துறையினர் நேற்று முடக்கினர்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "#DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை. முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. 

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai questioned about noble and udhayanithi trust


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->