ரூ.2,923 கோடி சொத்து உண்மை! மன்னிப்பு கேட்க முடியாது - அடித்து ஆடும் அண்ணாமலை!
Annamalai Reply to Kalanithi veerasami
கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
திமுகாவிரின் சொத்து பட்டியலில், ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரம் கோடி, எ.வ.வேலு - ரூ.5 ஆயிரம் கோடி
கே.என்.நேரு - ரூ.2,495 கோடி, கனிமொழி- ரூ.830 கோடி, கலாநிதிமாறன் - ரூ.12 ஆயிரம் கோடி, உதயநிதி - ரூ.2 ஆயிரம் கோடி, சபரீசன் - ரூ.902 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்திருந்தார்.
மேலும், கலாநிதி வீராசாமி - ரூ.2,923 கோடி சொத்து வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்க்கு மறுப்பு தெரிவித்த கலாநிதி வீராசாமி, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், திமுக எம் பி கலாநிதி வீராசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கலாநிதி வீராசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனவும், மன்னிப்பு கூற முடியாது என்றும் அந்த நோட்டீஸில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி, டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி உள்ளிட்டவர்களுக்கு இதே பாணியில் அண்ணாமலை பதில் நோட்டிஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Annamalai Reply to Kalanithi veerasami