மன்னிப்பும் கிடையாது, நஷ்ட ஈடும் கிடையாது - டிஆர் பாலுக்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி டிஆர் பாலுவிடம் அண்ணாமலை மன்னிப்பும் கேட்க மாட்டார், நஷ்ட ஈடும் தர மாட்டார் என்று, அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட திமுகவினர் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

மொத்த ஒரு லட்சத்து முப்பத்து நான்கு கோடி ருபாய் திமுகவினர் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சொத்து குவிப்பு என அவதூறாக கூறியதாக, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு திமுக எம் டி ஆர் பாலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், திமுக எம்பி டி,ஆர் பாலு அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் அவரது வழக்கறிஞர் பதில் கொடுத்துள்ளார்.

அதில், டி ஆர் பாலு சொத்து குவிப்பு தொடர்பான தனது கருத்துக்களில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார், மன்னிப்பும் கிடையாது, நஷ்ட்ட ஈடும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai reply to TR Balu MP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->