கண்ணாடி போட்டு பாஜக சரித்திரத்தை படிங்க.. பொன்னையனுக்கு அண்ணாமலை அட்வைஸ்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து இன்று காலை கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளிக்கும் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது "வடமாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக என்ன செய்தது என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என அதிமுகவின் மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார், இது குறித்து உங்கள் கருத்து என்ன..?" என அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை "சில மாதங்களுக்கு முன்பு பொன்னையன் பேசிய ஆடியோ வெளியானது. அதை நான் பேசவில்லை என மறுத்துவிட்டார். இதெல்லாம் அரசியலில் சகஜம் தான். அதற்குள் நான் போக விரும்பவில்லை. 

பாரதிய ஜனதா கட்சி பொருத்தவரை பீகார் என்பது ஒரு உதாரணம். எங்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிதீஷ்குமார் கட்சி பாஜகவை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இருப்பினும் முதலமைச்சராக நிதீஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்பொழுது பகையாளி என சொன்னவருடன் பங்காளியாக கைகோர்த்து லல்லு பிரசாத் யாதவ் மகனுடன் சேர்ந்து கொண்டு புதிய கூட்டணி அமைத்து நிதீஷ்குமார் ஆட்சியில் அமர்ந்துள்ளார். எனவே இந்தியா முழுவதும் உள்ள பாஜகவின் சரித்திரத்தை முழுமையாக படிக்க வேண்டும். 

கண்ணாடி போட்டுக்கொண்டு, இரவில் லைட் போட்டுக் கொண்டு, தூங்காமல் சரித்திரத்தை சரியாக படிக்கும் பொழுது பாஜக பிராந்திய கட்சிகளுக்கு என்ன செய்திருக்கிறது என்பது தெரியும். 

எனவே சில அரசியல் தலைவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை என்னவென்றால் சரித்திரத்தை சரியாக படியுங்கள். சரித்திரத்தை தவறாக படித்தால் தவறாக யோசிப்பீர்கள்" என அதிமுக மூத்த தலைவர் பொன்னையனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai responds to Ponnaiyan comment on BJP


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->