பாஜக தொண்டரால் தான் சி.எஸ்.கே வெற்றி பெற்றது.!! டி.ஆர்.பி ராஜாவுக்கு அண்ணாமலை பதிலடி..!! - Seithipunal
Seithipunal


நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் சென்னை அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிக தமிழக வீரர்களை கொண்ட குஜராத் அணியை நாம் கொண்டாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழ பாஜக தலைவர் அண்ணாமலையிடம் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "தோனிக்காக சென்னை அணியின் வெற்றியை நாம் கொண்டாடுவோம். சென்னை அணியை வெற்றி பெறச் செய்தது குஜராத்தை சேர்ந்த பாஜக தொண்டர் ரவிந்திர ஜடேஜா தான். அவரது மனைவி குஜராத் மாநிலம் ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்.

தமிழக வீரர்களே இல்லாத சென்னை அணியை போன்று அதிக தமிழ் வீரர்களை கொண்ட குஜராத் அணியையும் நாம் கொண்டாட வேண்டும். நேற்றைய போட்டியில் குஜராத் அணியை சேர்ந்த தமிழர் அதிக ரன்களை எடுத்துள்ளார். அவரையும் நாம் கொண்டாட வேண்டும்" என திமுக அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் பதிவுக்கு பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai responds to TRP Raja commenton csk win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->