பிரிவினைவாதம் தான் திமுகவின் அடித்தளம்! மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு மாளிகையில் அளிக்கப்பட உள்ள விருந்துக்கான அழைப்பிதழ் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரதக் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தரப்பட்ட மக்கள் அதனை வரவேற்கும் எதிர்த்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!" என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மு க ஸ்டாலின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "கடந்த ஆண்டு, தி.மு.க எம்.பி திரு ராசா உங்கள் முன்னிலையில் தனி நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்ப திமுக கட்டாயப்படுத்தப்படும் என்றார். நீங்கள் அவரைத் தடுத்துவிட்டீர்களா? அல்லது அவரின் கருத்தை கண்டித்தீர்களா? பிரிவினைவாதம் தான் திமுகவின் அடித்தளம்.

திமுகவுக்கு இந்தியாவோ, பரதமோ எப்பொழுதும் அர்த்தமில்லாத ஒன்று. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் உங்களைப் போன்ற பிரிவினைவாதக் கூறுகளை நினைவுபடுத்தியிருக்கலாம் & நமது அரசியலமைப்பில் இந்தியாவே பாரதம் என்று வலியுறுத்தியது, நம் பாரம்பரியத்தை அனைவருக்கும் நினைவூட்டுகிறது!" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to MKStalin comments on BJP Bharat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->