என்னை தடுக்க முடியாது.. அம்பலப்படுத்தியே தீருவேன்.!! - அண்ணாமலை ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அவரது குடும்பத்தினர் வரை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமுக வலைதளங்களில் பதிவிட்டதோடு போதைப்பொருள் கடத்தலுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மு.க ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதோடு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக நிர்வாகியும் சர்வதேச போதைப்பொருள் மன்னனுமான ஜாபர் சாதிக்கின் தலையீடு செய்தியாக வெளியானதில் இருந்து தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

 

ஜாஃபர் சாதிக்கை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தும், அவரது தொடர்பும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், திரு மு.க ஸ்டாலின் எனக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திரு மு.க ஸ்டாலின் குறைந்தபட்சம் செய்திகளையாவது பார்க்கிறாரா என்பது இப்போது எழும் சந்தேகம். எத்தனை சட்டபூர்வ நோட்டீஸ் வேண்டுமானாலும் அனுப்புங்கள், ஆனால் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தில் திமுகவின் தொடர்பை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to MKStalin legal notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->