இந்திராகாந்தி நெற்றியில் வழிந்த ரத்தம் குறித்து திமுக தலைவர் சொன்ன வார்த்தை? - அண்ணாமலை ஆவேச பேட்டி.!
annamalai say about congress dmk alliance issue
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
"இந்திராகாந்தி எமர்ஜென்சியை முடித்துவிட்டு தமிழகம் வந்தபோது, அவர் மீது கல் வீசியது யார்? கருப்புக் கொடி காட்டி, கல் எரிந்து, இந்திராகாந்தி நெற்றியில் ரத்தம் வழிந்த போது, அதனை .......................... வார்த்தையை கூறியது எந்த திமுக தலைவர்?
ஆனால் வெட்கமே இல்லாமல் அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, அந்தக் கட்சியினுடைய பெரும் தலைவிக்கு அவமானம் ஏற்படுத்திய திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொச்சைப்படுத்தும் விதமான ஒரு வார்த்தையை பயன்படுத்தி பேசியது கருணாநிதிதான். இன்று ஆளுநருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து நடந்து இருக்கும் போது, அது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசவில்லை.
அப்படியானால் காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் அடகு வைத்து விட்டார்களா? தவறை தவறு என்று சொல்வது தான் ஒரு அரசியல் தலைவருக்கு அழகு. அன்று இந்திராகாந்திக்கு நடந்தபோது காங்கிரஸார் அடுத்த நிலைக்கு தங்களை கொண்டு சென்றார்கள். இன்று அடுத்த நிலைக்கு செல்ல இவர்களுக்கு பயம்.
ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்லும் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அனுப்பி இருக்கின்ற வீடியோவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்க்க வேண்டும்.
சினிமா துறையில் உள்ளவர்களை பாரதிய ஜனதா கட்சி இயக்கவில்லை. தங்களுடைய கருத்துகளை அவர்கள்தான் தெரிவிக்கின்றனர். ஆனால் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்தவர்கள் தான் தற்போது கோபப்பட்டு கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் பற்றி திருமாவளவனுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று அண்ணாமலை அந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
English Summary
annamalai say about congress dmk alliance issue