குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும் - அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தினமான இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் பேசிய அண்ணாமலை, "நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம். கடந்த ஒரு வருடமாக சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பா.ஜ.க கொண்டாடி வருகிறது. 

இன்று தமிழ்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை காட்டியுள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக்கொடியை பெற்று, தங்களது வீடுகளில் ஏற்றியுள்ளனர். 

தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் மற்றும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதனை முற்றிலும் ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு பா.ஜ.க கடுமையாக உழைக்கும். 

அடுத்த 25 ஆண்டுகளில், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai say about Family politics Aug


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->