ராகுல் காந்தி பாத யாத்திரை முடியும்போது நிச்சயம் மோடியின் பக்தராக மாறுவார் - அண்ணாமலை பேட்டி! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி பாத யாத்திரை முடியும்போது ராகுல் காந்தி மோடியின் பக்தராக மாறுவார் என்று தெரிவித்துள்ளார்.  

நாகர்கோவிலில் நேற்று பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது,

"கன்னியாகுமரியில் இருந்து இன்று தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்திக்கு எங்களது வாழ்த்துக்கள்.

75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில்  ராகுல்காந்தியின் குடும்பத்தினரே பெரும்பான்மையான காலம் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதைய காலத்தில் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்று பார்க்க வேண்டும்.

நரேந்திர மோடி பிரதமராக வந்த கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. இதனை, நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு உள்ளது.

இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள். எப்போதும் இல்லாத ஒற்றுமை இப்போது இந்தியாவில் இருக்கிறது.

பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி இணைத்துள்ளார் என்பதை ராகுல் காந்தி பார்க்கும் போது, நடைபயணம் முடிந்த பின் நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

காங்கிரஸ் கட்சிக்கு நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே சொந்தக் குரல் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்". என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai say about Rahul Gandhi padayatra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->