#BigBreaking | பிடிஆர் ஆடியோ 1 மணிநேரம் இருக்கே! ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கமலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துவது, "நிதி அமைச்சராக இருந்த அண்ணன் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்கள்.

கடந்த 21 ஜனவரி 2022 தியாகராஜன் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மேடையில் பேசியிருக்கிறார், "நம்முடைய நிதியை அமைச்சர், அருமை சகோதரர் பழனிவேல் தியாகராஜன் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அதிகமாக நான் சொல்ல தேவையில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், பெருமையாக, பூரிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக மூன்று தலைமுறைகாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள குடும்பத்தைச் சார்ந்தவர் பழனிவேல் தியாகராஜன்.

அமைச்சரவையில் மிகவும் கடினமான துறை எது என்றால் கேட்டால், நிதித்துறை தான். அந்த நிதிதுறை அமைச்சராக இருந்து தமிழகத்தினுடைய நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், அதற்கு காரணம் சொல்லாமல் நிதியை வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையிலும், அரசின் கொள்கை திட்டங்களை வகுப்பதிலும் தனது மொத்த திறமையும் வழங்கி வருபவராக தியாகராஜன் இருந்து கொண்டிருக்கிறார்" என்று பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்திருக்கிற பாராட்டு பத்திரம்.

இதேபோல மீண்டும் ஒரு முறை கூட முதலமைச்சர் தியாகராஜனை பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார். இப்படி பாராட்டு சான்றிதழ்களை வாரிக்குவித்த தியாகராஜனை மாற்ற வேண்டிய காரணம் என்ன?

ஒரு பக்கம் திராவிட மாடல் அரசினுடைய பிராண்ட் அம்பாசிட்டராக தியாகராஜன் இருந்தார். இந்தியா முழுவதுமே குறிப்பாக தமிழகத்தினுடைய சாதனை, அதிலும் குறிப்பாக திமுகவினுடைய, திராவிட மாடல் சாதனையை தொடர்ந்து பழனிவேல் தியாகராஜன் பேசிக் கொண்டிருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வந்த ஒரே காரணத்திற்காக அவரை நிதி துறையில் இருந்து மாற்றி, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றியிருப்பது எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

காரணம் அவர் தவறு செய்யவில்லை. தவறு செய்தது திமுகவின் முதல் குடும்பம் தான். இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் அரசு வழக்கறிஞரை வைத்து என் மீது ஒரு அவதூறு வழக்கு போட்டு இருக்கிறார். நான் முதலமைச்சருக்கு சவால் விடுகிறேன். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை வைத்து தான் உங்கள் மீது நான் குற்றம் சாட்டியிருக்கிறேன். இது குற்றம் என்றால், அதுவும் குற்றம் தானே. 

சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் நீங்கள் லஞ்சம் வாங்கி இருப்பதாக கூறிய அதே அண்ணாமலை தான், உங்களுடைய மகனும், மருமகனும், உங்களுடைய குடும்பமும் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று, தியாகராஜன் கூறியதை தான் நானும் அதை கூறுகிறேன். அதற்கு ஒரு நியாயம், இதற்கு ஒரு நியாயம் வேண்டாம். 

முதலமைச்சர் அவர்களே, உங்களிடம் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் அரசு வழக்கறிஞரை பயன்படுத்தி தியாகராஜன் ஆடியோ குறித்து என் மீது நீங்கள் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

காரணம் அந்த ஆடியோ நீதிமன்றத்திற்கு வர வேண்டும். அந்த ஆடியோவை நீதிபதி ஆராய வேண்டும். அந்த ஆடியோ தடவியல் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் இந்த ஆடியோவின் முழு விவரத்தையும் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். ஒரு மணி நேரத்துக்கு மேற்பட்ட அந்த ஆடியோவை நான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். இன்னும் அதில் பல விவகாரங்கள் இருக்கிறது. 

ஏன் நான் மூன்றாவது, நான்காவது ஆடியோக்களை வெளியிடவில்லை என்றால், இதில் பழனிவேல் தியாகராஜனை பகடைக்காயாக மாற்ற வேண்டாம் என்பதற்காகத் தான்.

இந்த விவகாரத்தில் நீங்கள் அமைச்சரை மாற்றிவிட்டு, திருப்பி தமிழக அரசை நடத்தி விடலாம் என்று நினைத்தால், அது பகல் கனவு. அதனால் நிச்சயமாக இதற்கு என் மீது வழக்கு போட வேண்டும். காரணம் இதில் தியாகராஜனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தப்பு செய்தவர்கள் பற்றி தான் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say PTR Audio 1 hrs DMK File MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->