மொத்த திமுகவினருக்கும் சிக்கலை உண்டாக்கிய செந்தில்பாலாஜி! எம்ஜிஆர்., பாணியில் பதிலடி கொடுத்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள விலை உயர்ந்த ரஃபேல் வாட்ச் எங்கிருந்து வந்தது? தொழிலதிபர்களை மிரட்டி வந்ததா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு அண்ணாமலை, "நான் பாஜக தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். 

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். 

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தை எப்படி திமுக கையாள போகிறது, அண்ணாமலைக்கு என்ன பதிலடி கொடுக்கப்படும் என்று ஒருபக்கம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதே சமயத்தில், திமுகவினரின் சொத்து விவரம் கேட்டதால் தான் எம்ஜிஆர், திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வாட்ச் எப்படி வந்தது என்று கேட்க? அதற்க்கு எம்ஜிஆர் பாணியில், 'நான் விவரம் தருகிறேன். ஆனால், திமுகவினரின் சொத்து, வருமான விவரங்களை மக்கள் மத்தியில் தாக்கல் செய்ய தயாரா என்று அண்ணாமலை  பதிலடி கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்தில் சமூகவலைத்தளம் இல்லை. இன்று ஒருவர் கேள்வி எழுப்பி, அதற்க்கு பதில் வரவில்லை என்றால் ஆயிர கணக்கில் அதே கேள்வி முன்வைக்கப்படும். அதற்க்கு உதாரணம் 'மூலபத்திரம்' என்ற ஹேஷ் டேக்.

யாருக்கு தெரியும் அண்ணாமலை நாளை, "என் சொத்து விவரங்களை காட்டிவிட்டேன், திமுகவினர் காட்ட பயப்புடுகின்றனர்" என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai senthil balaji DMK mkstalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->