அண்ணாமலையின் செயல் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது..விஷால் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் மியப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்கு அளிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன் என்று அறிவித்தார் நடிகர் விஷால். நடிகர் விஜய்யை போல 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ரத்னம். அத்திரைப்படத்திற்கான புரமோஷனில் இந்த ஈடுபட்ட விஷால் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார் அதில் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விஷால் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஷால் அண்ணாமலை பற்றி கூறுகையில், அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சிறந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன். பாஜக தலைவர் அண்ணாமலையே நேரில் பார்த்ததில்லை ஆனால் அடிக்கடி மெசேஜில் பேசிக் கொள்வோம் என்று கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai speech very nice vishal interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->