அணையும்போது பிரகாசமாக தான் எரியும்… அண்ணாமலை விமர்சனம்.!
Annamalai speech viral
தமிழக பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் தொடர்பு கிடையாது என நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு குறைந்தபட்சமாக 40% விளையாட்டு மைதானம் தேவை. விளையாட்டு மைதானம் தேவை தான். ஆனால் அதற்கு முன் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
கவர்ச்சிகரமான திட்டங்களை கொடுத்ததால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என முதலமைச்சர் களத்தில் இறங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது அவர்கள் 511 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வெறும் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நினைவேற்றவில்லை.
வருகின்ற ஜூன் நான்காம் தேதி வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் எத்தனை இடத்தில் ஓட்டு வாங்குகிறார்கள் என்று.
ஒரு விளக்கு அணியும் பொழுது பிரகாசமாகத்தான் எரியும். அப்பொழுதுதான் இன்றைய தலைவர்களின் கருத்துகளையும் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.