அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார் - ஓ.பன்னீர்செல்வம்!! - Seithipunal
Seithipunal


அண்ணாமலையின் கடின உழைப்பு பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறிவுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக எதிராக ஒரு அணியை உருவாக்கி யாத அணியில் செயல்பட்டு வந்தார். மக்களவைத் தேர்தலில் அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்து ராமநாதபுரம் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு  பெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். சுமார் இரண்டு லட்ச ரூபாய் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 272 எம் பி கல் வேண்டுமென்று நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு சென்று தமிழகம் திரும்பிய பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். அதிமுகவினர் ஒன்றினையவில்லை  எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அண்ணாமலையின் கடின உழைப்பை பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai worked round the clock for the development of BJP O Panneerselvam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->