அதிரடி அறிவிப்பு!!! ஜூன் முதல் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
apply for women rights allowance from June Chief Minister MK Stalin
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து முதலமைச்சர் தெரிவித்ததாவது," மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.
இதில்,ரூ.1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
கலைஞர் உரிமைத்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் ஜூனில் 4-ம் கட்டமாக 9000 இடங்களில் முகாம் நடத்தப்படும்.
இதில்,9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் " எனத் தெரிவித்தார்.
English Summary
apply for women rights allowance from June Chief Minister MK Stalin