அரியலூர் நகராட்சியை கைப்பற்றுவது யார்? சம்பவம் செய்யப்போகும் சுயேச்சை வேட்பாளர்கள்.!
ARIYALUR ELECTION RESUT 2022
அரியலூர் நகராட்சியில் திமுக 7 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால், அதே சமயத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது அதிமுக, திமுக சம நிலையில் உள்ளதால், வெற்றி பெற்றுள்ள 4 சுயேச்சை வேட்பாளர்கள் முடிவைப் பொறுத்தே அரியலூர் நகராட்சி வசம் யாருக்கு செல்லும் என்பது முடிவாகும்.
இதேபோல், தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் பாமக வேட்பாளர் மற்றும் சுயச்சை வேட்பாளர்களின் முடிவைப் பொறுத்தே, யார் அரூர் பேரூராட்சியை கைப்பற்றுவார் என்று முடிவாகும் நிலை உருவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திராவிட முன்னேற்றக் கழகம் 7 இடங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக, அதிமுக தலா ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், பாமக - சுயேச்சை வேட்பாளர்கள் முடிவைப் பொறுத்தே எந்த கட்சிக்கு பேரூராட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று தெரியவரும்.
இதற்கிடையே, செங்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 9 இடங்களிலும், அதிமுக எட்டு இடங்களிலும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள ஒரு வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அருள்ஜோதி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவருடைய வாக்கு யாருக்கு என்று கேள்வி எழுந்த நிலையில், அவருடைய ஆதரவை பெறுவதற்காக திமுகவினர் அவரை கடத்திச் சென்றதாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
ARIYALUR ELECTION RESUT 2022